தூத்துக்குடி மாவட்டத்தில் 63 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவு!

தூத்துக்குடியில் காவல் துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 63 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.;

Update: 2023-11-01 13:30 GMT

தூத்துக்குடியில் பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடியில் காவல் துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 63 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதேபோல, பொதுமக்களை காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சந்திக்கும் வகையில் வாரம்தோறும் புதன்கிழமை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் குறைதீர் கூட்டம் நடத்த தமிழக டிஜிபி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த சில மாதங்களாக காவல் துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி புதன்கிழமையான இன்று (01.11.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 8 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 55 மனுதாரர்கள் என மொத்தம் 63 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமக்கள் அளித்த மனு மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News