தூத்துக்குடி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-08-06 14:05 GMT
தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓவாக பதவி ஏற்றுக் கொண்ட ஜெகவீரபாண்டியன்.

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் அன்மையில் மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஜெகவீரபாண்டியன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அவர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

மேலும் தான் பணியாற்றிய இடங்களில் பத்திரிகையாளர்களிடம் சுமூகமான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பாக செயலாற்றியுள்ளார்.

இவர், ராஜபாளையம், வில்லிவாக்கம் போன்ற சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சுப்பு-வின் மகன் ஜெகவீரபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News