பாலியல் வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை.. தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு...

சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2023-03-17 11:58 GMT

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 24.06.2015 அன்று பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக செய்துங்கநல்லூர் ஏ.கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் (43) என்ற தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக, அப்போதைய செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர் புலன் விசாரணை செய்து கடந்த 30.03.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000- அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து, கண்ணன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் செல்வக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News