போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகிழம்புரம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (35) என்பவரை தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, சுடலைமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தட்டப்பாறை காவல் நிலைய (பொறுப்பு ) ஆய்வாளர்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், வனிதா ராணி மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் புலன் விசாரணை செய்தனர். மேலும், இந்த வழக்கில் கடந்த 11.05.2016 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட சுடலைமணி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 11,000/- அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தட்டப்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், வனிதா ராணி, சாந்தகுமாரி ஆகியோருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமிக்கும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் கலா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.