தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-25 14:00 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மற்றும் செப்டம்பர் 28 ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் அம்மன்புரம் கிராமத்தில் நாளை (26.09.2023) வெங்கடேஷ் பண்ணையார் 20-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை-பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (2)-இன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் அமைந்துள்ள 68 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கடையுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு 28.9.23 அன்றும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 02.10.2023 அன்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை, பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக்கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் செப்டம்பர் 26, 28 மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதிகளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News