ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை சாதனை என்போர், பிரதமரின் பயணத்தை விமர்சிக்கலாமா? - தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை சாதனை என்பவர்கள், பிரதமரின் பயணத்தை விமர்சிக்கின்றனர் என்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.;

Update: 2023-06-28 03:25 GMT

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜனுக்கு விமான நிலையத்தில் காவலர்கள் மரியாதை செலுத்தினர்.

பின்னர், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உயரிய விருது வழங்கி இருப்பது பெருமைதான். இதன் மூலம் உலகில் பிரபலமான பிரதமர் என்ற பெயரை பிரதமர் மோடி பெற்றுள்ளார். முன்பு எல்லாம் எந்த தீர்வாக இருந்தாலும் எதற்கு தீர்வு என்றாலும் இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் இன்று எதற்கு தீர்வு என்றாலும் மற்ற நாடுகள் இந்தியாவை நோக்கி பார்வையை செலுத்துவது என்பது பிரதமரின் மிகபெரிய சாதனை ஆகும்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் சென்றால் அதனை சாதனை என்கின்றனர். ஆனால் அதே சமயம் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் சென்றால் அதனை விமர்சிக்கின்றனர். இப்போது தெரியும் வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி பிற நாடுகளின் துணை நம் நாட்டிற்கு கிடைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் தென்பகுதிகள் இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். வந்தே பாரத் 25 ஆது ரயில்பெட்டி நமது பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் இன்று நமது நாட்டில் தயார் செய்யப்பட்டு போபால் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த தொழில் நுட்பங்கள் முதலிலையே இருந்தது. ஆனால் ஏற்கனவே ஆண்டுகொண்டு இருந்த அரசுகள் அதனை பயன்படுத்தவில்லை. ஆனால் பாரத பிரதமர் சுய சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் நமது நாட்டில் அனைத்து பொருட்களும் தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஊக்குவித்து வந்தே பாரத் ரயில் திட்டம் ஆரம்பித்து உள்ளது.

இந்த இரயில் திட்டம் இந்தியா முழுவதும் நகரங்களை இணைக்கின்றது. அதில் தமிழகத்தின் பங்கு இருக்கின்றது எனவே வந்தே பாரத் இரயில் திட்டம் தென் பகுதியும் இனைக்க வேண்டும் என்பது என்னை போன்றோர்கள் ஆசை. தென்பகுதியில் நடைபெற்று வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும்.

உலகிலையே இரண்டாவது நீளமான மிகபெரிய தேசிய நெடுஞ்சாலையானது இந்தியா கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார் எனவே இணைப்பு வந்தாலே வளர்ச்சியும் சேர்ந்து வந்துவிடும். தென் தமிழகமும் மத்திய அரசின் பல முயற்சியினால் வளர்ச்சியடைய இருக்கின்றது.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சரவதேச விமான நிலையமாக வளர்ச்சியடையும். அதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என்று  டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Similar News