தூத்துக்குடியில் மகளிருக்கு எதிரான வன்கொடுமை குறித்த நிலைக்காட்சி போட்டி

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிலைக்காட்சி போட்டி நடைபெற்றது.;

Update: 2023-11-30 13:58 GMT

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிலைக்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுக் கழகமும், தூத்துக்குடி ஸீ சைடு ரோட்டரி சங்கமும் இணைந்து சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினத்தை முன்னிட்டு கல்லூரியின் இளங்கலை கல்வியியல் முதலாமாண்டு மாணவிகள் பங்கேற்ற நிலைக்காட்சி போட்டியை நடத்தியது.

பாலின ரீதியான வன்கொடுமை என்ற தலைப்பினை ஆறு குழுக்களாகப் பிரிந்து மாணவிகள் சமூகத்தில் நிலவும் மகளிருக்கு எதிராக நிலவும் வன்கொடுமைகளை நிலைக்காட்சிப்படுத்தி அசத்தினர். நடுவர்களாக சுரேஷ் மற்றும் சுப்பையா வித்யாலயம் பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியை கலைச்செல்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவிகளுக்கு ஸீ சைடு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜூடு விஜயன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் முரளிதரன் மற்றும் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் உதவிப் பேராசியருமான வினோதினி சில்வியா மற்றும் எமிமா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News