மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு சிறப்பு முகாம்
பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்திட தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம் 3 நாள் நடைபெறுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு தகுதிவாய்ந்த பெண்கள் விண்ணப்பம் செய்வது தொடர்பாக தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கலைஞர் மகளிர் திட்ட உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோர் விண்ணப்பிக்கும் வகையில் பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்றன. முதற்கட்ட முகாம் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டு கட்டங்களாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடட்பட்டுள்ளது. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வருவாய்த் துறையில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளித்து ஆணையிட்டு உள்ளார்.
அதே போல இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகியை மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள திட்டங்களில் ஓய்வூதியதாரர் தவிர அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியத் திட்டங்களில் பெறுபவர்களின் ஓய்வூதியம் முதியோர் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்திட ஆகஸ்ட் 18, 19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் கொள்ளுமாறு கேட்டுக் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.