தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்
Sp Office Grievance Day தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.
Sp Office Grievance Day
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரம்தோறும் திங்கட்கிழமை ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தினைப் போல அனைத்து மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரிடையாக உயர் அதிகாரிகளிடம் வழங்குகின்றனர். பல்வேறு பட்ட மனுக்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படுகிறது. ஒவ்வொரு மனுதாரரிடம் அவர் எழுதியுள்ள குறைகளுக்கு தகுந்தவாறு விளக்கம் கேட்டு அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (27.12.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு கொடுக்க வந்த 21 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.