Rain Water Stagnation Need Action தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

Rain Water Stagnation Need Action தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-11-25 07:00 GMT

இங்கு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாதா?....அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (இடம்:துாத்துக்குடி)

Rain Water Stagnation Need Action

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மழை ஓரளவு பெய்த போதிலும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது.

தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர் சில மணி நேரத்தில் வடிந்தது. ஆனால், இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு இடங்களில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Rain Water Stagnation Need Action


இப்படி....மழைநீர்  தேங்கி கிடந்தா ஏன் டெங்கு வராது?....அதிகாரிகள்  கவனிப்பார்களா.....இந்த பகுதியை....

குறிப்பாக, தூத்துக்குடி திருவிக நகர், இந்திரா நகர், ராஜீவ் நகர் இரண்டாம் தெரு, மூன்றாம் தெரு மற்றும் 8 ஆம் தெரு, 9 ஆம் தெரு மற்றும் பிள்ளையார் கோவில் பகுதி பாக்கியலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் காலி மனைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள இந்த பகுதிகளில் மழை நீர் வெளியே செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக லாரிகள் மூலம் அல்லது மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News