பிரதமர் மோடி உலக அரங்கில் தமிழை கௌரவப்படுத்தி வருகிறார்: ஆளுநர் தமிழிசை
உலக அளவில் தமிழை பிரதமர் மோடி கௌரவப்படுத்தி வருகிறார் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நோட்டு புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருக்கிறது. ஜாதிய வேற்றுமை மாணவர்கள் அளவில் வேற்றுமை ஏற்படுத்தும் அளவில் உயிரை வாங்கும் அளவிற்கு இருக்கிறது என்பதை வேதனையாக இருக்கிறது. சில மோதல்களை தடுக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது, மற்ற ஊர்களில் நடக்கிறது என்பதை பேசாமல் இங்கு நடப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டு அரசியலை தாண்டி பொதுமக்கள் ஆசிரியர்கள் எல்லோரும் கூடி சிந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
படிக்கக்கூடிய சின்னதுரை என்ற மாணவரை சில பேர் வெட்டி அவர்கள் பழியை தீர்த்து இருக்கிறார்கள். இதை சாதிய கொடுமை என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மாணவர்கள் மத்தியில் எந்த சூழ்நிலை நிலவுகிறது என்பதை அலசி ஆராய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
இந்த விஷயத்தை ஆழமாக சிந்தித்து பள்ளிகளில் நல்ல வகையில் வகுப்புகளில் மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் இதற்கு முன்னால் இதேபோன்று வன்கொடுமையால் 40-க்கும் மேற்பட்டோர் ஊரைவிட்டு சென்றிருக்கிறோம் என்ற தகவல்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. இதை ஏன் காவல்துறை தடுக்க முடியாமல் மறைத்திருக்கிறார்கள். தவறி இருக்கிறார்கள். இதை எல்லாம் மிகப்பெரிய கேள்விகளாக இருக்கிறது.
அரசியலைத் தாண்டி இனிமேல் இவ்வாறு நடக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன். தமிழில் 40 ஆயிரம் மாணவர்கள் இன்று தேர்ச்சி பெறவில்லை ஐம்பதாயிரம் பிளஸ் டூ மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதவே இல்லை.
முதலில் தமிழை காப்பாற்ற வேண்டிய வேலையை பார்க்க வேண்டும். இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி எந்த விதத்திலும் பாதிப்படைய செய்யப் போவதில்லை இல்லாத திணிப்பை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பெருமையை இழந்து கொண்டிருக்கிறீர்களா என்று தோன்றுகிறது.
இந்தி திணிக்கப்படுகிறது என சொல்கிறார்கள் தமிழில் நீட் எழுதலாம் என சொல்லியாச்சு. தமிழில் யாரும் பாடம் எடுக்கவில்லை என்பதால் விட்டு விடுகிறோம் என கூறுகிறார்கள். முதலில் தமிழகத்தில் தமிழ் எந்த நிலையில் இருக்கிறது?
இந்தியை வைத்து 1967 ஆம் ஆண்டு முதல் அரசியல் செய்தாச்சு. இன்னும் எண்ணங்களில் முன்னேற்றமே வராதா? புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 20 மாநில மொழிகளில் தமிழிலும் பாடப் புத்தகங்கள் வந்துவிட்டது. பிரதமர் மோடி தமிழைப் பற்றி பேச கூடாது என தமிழக முதல்வர் கூறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியை கௌரவப்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதை முதலில் பார்க்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.