தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2023-07-28 09:30 GMT

போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ  நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு  நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கே.பி.தளவாய்புரம் பகுதியை சேர்ந்த உடையான் (வயது63) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னத்தாய் புலன் விசாரணை செய்து கடந்த 31.03.2018 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கறிஞர்கள் விவாதம் நடந்து முடிந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட உடையானுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடையான் கோர்ட்டில் இருந்து அழைத் செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னத்தாய், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் காவலர் முத்துலெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டி உள்ளார்.

Tags:    

Similar News