திருமண ஊர்வலத்தில், மணப்பெண் செய்த காரியம் என்ன தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அடுத்த தேமாங்குளத்தில் ராஜ்குமார் -நிஷா தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது .திருமண ஊர்வலத்தில், மணப்பெண் நமது பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு மற்றும் சிலம்பம் ஆகியவற்றை விளையாடி அசத்தினார்.
திருமணத்திற்கு வந்தவர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து அவருக்கு உற்சாகம் எழுப்பினர். மணமகன் ராஜ்குமாரும் தன் மனைவிக்கு பாராட்டு தெரிவித்தார்.நம் பாரம்பரிய கலைகளான சுருள் வாள் வீச்சு, சிலம்பம் ஆகியவை நம் வீரப் பெண்களால் காப்பாற்ற படுவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக உள்ளது.நமது பிள்ளைகளுக்கு கல்வியோடு இந்த தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொடுப்போம்.