பெட்ரோல், டீசல், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2021-06-11 07:34 GMT

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த விலை உயர்வை மத்திய அரசு கண்டு கொள்வதே கிடையாது. விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் சர்வதேச சந்தையை காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முனைவது தான் அரசின் கடமையாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் விஷம் போல் உயர்கிறது. இதனை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியா காந்தி அறிவித்தபடி தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் நகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்டல தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, மாநிலச் செயலாளர் பால்ராஜ், மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் முத்துப்பாண்டி, வெள்ளப்பட்டி காங்கிரஸ் தலைவர் சவரிஆனந்தம், மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டு வில்லவராயர், மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், மாநகர துணை தலைவர்கள் எ.டி.பிரபாகரன், அருணாசலம், மாநகர மாவட்ட செயலாளர் கோபால், INTUC தொழிற்சங்க தலைவர் ராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News