மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் :- மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், வாகனம் நிறுத்தும் இடம், சாலைவசதி, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால் பணிகள், கழிவு நீர் கால்வாய்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் தோண்டப்பட்டு போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகள் மழை நீரில் தத்தளித்தன. பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். தற்போது பருவமழை தொடங்க குறைவான நாட்களே உள்ளதால் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பூபால்ராயர்புரம் மெயின் ரோட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி நேரில் ஆய்வு செய்து பருவமழை தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் சரவணன், வருவாய் அதிகாரி தனசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32வது வார்டுக்கு உட்பட்ட லயன்ஸ் டவுண் முதல் தெருவில் தேங்கி கிடங்கும் குப்பை மற்றும் கழிவு பொருட்களால் சுகாதரசீர்கேடு ஏற்ப்படுவதாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் அளித்த புகாரைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல சுகாதார அதிகாரி ஸ்டாலின் மேற்ப்பார்வையில் லயன்ஸ் டவுண் முதல் தெருவிற்கு சென்று ஆய்வு மேற்க்கொண்ட மாநகராட்சி சுகாதர அதிகாரிகள் அங்கு தெருவில் கிடந்த குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி மற்றும் கிழக்கு மண்டல சுகாதார அதிகாரி ஸ்டாலினுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
#Rainwater #Drainage #Works #In-person #inspection #In-personinspection #Corporation #Commissioner #CommissionerSaranya #சரண்யா #Saranya #rain #drainage #water #instanews #thoothukudi #tamilnadu