M.P.Interview At Tuticorin தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம்: கனிமொழி எம்.பி. பேட்டி
M.P.Interview At Tuticorin தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.;
M.P.Interview At Tuticorin
தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அத்தனை அறிவிப்புகளையும் எவ்வாறு நிறைவேற்றி வருகின்றாரோ அதேபோல் அவரது உத்தரவின்படி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் இன்று மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம் ஆகும்.
மீனவர்களின் கோரிக்கைகளை மீனவர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி மீனவ மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறையை அகற்றுவதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறி உள்ளார். முதலில், பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம் என சிரித்தபடி கனிமொழி எம்பி தெரிவித்தார்.