குழந்தையின் சிகிச்சைக்கு உதவி கேட்ட பெண்: உடனடியாக ஏற்பாடு செய்த கனிமொழி எம்.பி.!

மக்கள் களம் நிகழ்ச்சியின்போது, குழந்தைக்கு பேசும் திறன் குறைபாட்டினை சரிசெய்வதற்கு மனு அளித்த உடனேயே, அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கனிமொழி எம்.பி. ஏற்பாடு செய்து உள்ளார்.;

Update: 2023-09-10 15:17 GMT

மக்கள் களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்த ராஜலட்சுமி.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அப்போது, கடம்பூர் வட்டாரம், சோழபுரம் பகுதியில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவர் தனது 5 வயது மகள் தேன்மொழி என்ற குழந்தைக்கு பேசும் திறன் குறைபாட்டினை சரிசெய்வதற்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மனு அளித்தார்.

ராஜலட்சுமி தனது குழந்தை தேன்மொழியை கடந்த 2.8.2022 முதல் சோழபுரம் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து 5.9.2023 வரை சோழபுரம் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தையை அழைத்து சென்று வந்துள்ளார். கடந்த 5.09.2023 அன்று சோழபுரம் அங்கன்வாடி மையத்தில் தேன்மொழிக்கு சீருடை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், தேன்மொழி நீண்ட நாட்களாக பேச முடியாமல் இருந்த காரணத்தினால் கடம்பூர் வட்டார பள்ளி சுகாதாரத் திட்டம் குழுவினரால் 24.01.2023 அன்று சோழபுரம் அங்கன்வாடி மையத்தில் வைத்து ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனை செய்து பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அங்கு பரிசோதனை செய்ததில் தேன்மொழிக்கு MR Speech Delay என்ற நோய் உள்ளதாக கண்டறியப்பட்டது. மேலும், 28.01.2023 முதல் Speech Theraphy வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் Speech Theraphy பெற்றுக்கொள்ள பள்ளி சுகாதாரத் திட்டம் குழுவின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 5 மாதங்களாக குழந்தையின் தாயார் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை. மேலும் குழந்தையின் சிகிச்சை மற்றும் பரிசோதனை சம்பந்தமான எந்த ஒரு மருத்துவ அறிக்கையும் தேன்மொழியின் தாயார் ராஜலட்சுமி என்பவர் 09.09.2023 அன்று கடம்பூர் மக்களைத் தேடி மருத்துவக் குழுவிடம் தெரிவிக்கவில்லை.

மேலும், தேன்மொழிக்கு இயன்முறை சிகிச்சை தேவையில்லை என்பதால் Speech Theraphy பெற கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சோழபுரம் ஊராட்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் மனு அளித்து தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மிகுந்த மன வேதனையுடன் ராஜலட்சுமி தெரிவித்தார்.

இதையெடுத்து, அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்களிடம் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவக்குழுவினர் தேன்மொழியின் இல்லத்திற்கே சென்று அவரை பரிசோதனை செய்து Speech Theraphy இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மூலம் குழந்தையின் பேசும் திறன் விரைவில் மேம்படும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்ததாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News