மழை: தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக, குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
கனமழை தொடரும் நிலையில், இராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளூக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.