தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக லட்சுமிபதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த செந்தில்ராஜ் அண்மையில் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையெடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார். அவது பொறுப்பை கூடுதல் ஆட்சியரான சுபம் ஞானதேவ் ராவிடம் ஒப்படைத்து சென்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட செந்தில்ராஜிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது பணிக்காலத்தில் ஏராளமான திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டு வந்ததாக பாராட்டும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசுப் பணியில் பணியிட மாற்றம் என்பது தவிர்க்க முடிாயது என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியது பெருமைகா உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட லட்சுமபதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக லட்சுமிபதி தற்போது பொறுப்பேற்றுள்ளார். அப்போது, கூடுதல் ஆட்சியர் சுபம் ஞானதேவ் ராவ், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் 27 ஆவது ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் லட்சுமபதி இதற்கு முன்பு செங்கல்பட்டு சார் ஆட்சியராக பதவி வகித்து வந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு லட்சமபதி கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நல்ல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.