Komari Vaccination Camp Inaguration கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: அமைச்சர் வேண்டுகோள்

Komari Vaccination Camp Inaguration கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ள நிலையில், கால்நடை வளர்ப்போர் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.;

Update: 2023-11-06 07:06 GMT

தூத்துக்குடியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Komari Vaccination Camp Inaguration 

தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்று இன்று தொடங்கி உள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்றினை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் இன்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகள் ஒருங்கிணைந்து இந்த முகாமினை இன்று முதல் 21 நாட்கள் அதாவது நவம்பர் 26 ஆம் தேதி வரை நடத்துகின்றன.

கோமாரி நோயினால் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன. மேலும் சினையில் இருக்கும் கன்றும் பாதிக்கப்பட்டு இறக்கும் அபாயம் உள்ளது. மேலும் பால் அளவும் குறைந்துவிடும். இந்த நிலையை மாற்றுவதற்காகவே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த முகாமினை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என .அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் தூத்துக்குடி ஜான் சுபாஷ், தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News