Human Rights Day Pledge தூத்துக்குடியில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு

Human Rights Day Pledge தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-12-09 07:39 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

Human Rights Day Pledge

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, அலுவலக மேலாளர் இளங்கோவன் உட்பட அனைத்து அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மேலும், என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News