தூத்துக்குடி மாவட்டத்தில் 2322 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2322 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-23 15:30 GMT

தூத்துக்கடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வரும் விவரங்கள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கூட்டுடன்காடு, அய்யனார் காலனி, தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலதட்டப்பாறை, புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பச்சேரி காலனி ஆகிய பகுதிகளில் 30 மின் கம்பங்கள், பொது சுவர்கள் 7 என 37 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.

திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துராம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைவன்வடலி, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்டப்ட குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 மின்கம்பங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட் துரைசாமிபுரம், நளராஜபுரம், மார்தண்டநகர், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமி நகர், நாலுமாவடி, கோட்டார்விளை, அங்கமங்கலம், சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 44 மின் கம்பங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.

மணியாச்சி உட்கோட்டத்தில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசனூத்து, கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 3, மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 1, பொதுசுவர் 1, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 2, பாலம் 2 என 9 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தைகொண்டான் பகுதியில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 46, பொது சுவர் 2 என 48 இடங்களிலும் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னையாபுரம் பகுதியில் மின்கம்பங்கள் 4, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 1, பாலம் 1 என 6 இடங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்குளம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீர்காட்சி, நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைத்தியலிங்கபுரம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 71, பொதுசுவர் 2, நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 1, பாலம் 2 என 76 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 250 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டன.

ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர். இதுவரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2322 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News