தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் செப்- 22 வரை விண்ணப்பிக்கலாம்;
தூத்துக்குடி கடற்கரை சாலையில் மதுரா கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டக சாலை வளாகத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெற மாணவர் சேர்க்கை செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் சேருவதற்கு 01.08. 2023 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மாணவர் சேர்க்கைக்கான குறைந்த கல்வித் தகுதி 12 ஆவது வகுப்பு தேர்ச்சி ஆகும். 10, 12 கல்வி முறை தேர்ச்சி பெற்ற இளங்கலை பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு, மூன்றாம் ஆண்டு பட்டய படிப்புக்கு பிறகு பட்டயப் படிப்பு முடிந்தவர்கள் தகுதியானவர்கள்.
பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.18,750 ஆகும். கட்டணம் இணையவழி செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப் படுபவர்கள். பயிற்சிக்கான பாடங்கள் பயிற்சி காலம் மற்றும் இதர விவரங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.