தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 16 வாகனங்களுக்கான பொது ஏலம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2023-08-25 12:43 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆண்டுதோறும் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுகிறது.

ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் 30.08.2023 அன்றே ரூபாய் 2000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்தொகை என முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9498194612, 9498196359 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News