கோவில்பட்டியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோவில்பட்டியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.;

Update: 2023-08-23 14:25 GMT

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். (கோப்பு படம்).

கோவில்பட்டியில் போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு கங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜகனி (70) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கைதான ராஜகனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து செய்யப்பட்டது. இந்த வழக்கை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி புலன் விசாரணை செய்து கடந்த 21.08.2019 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட ராஜகனிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதையெடுத்து, ராஜகனி போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, குற்றம்சாட்டப்பட்ட வருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News