தூத்துக்குடி அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் 77 வது சுதந்திர தின விழா சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது.;
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் 77 வது சுதந்திர தின விழா சிறப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் 77 ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. ஆர்.எஸ்.புரத்தில் இருந்து சாயர்புரம் வரை சென்று திரும்பும் வகையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் போட்டி தொலைவாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை கனகலட்சுமி, சங்கீதா மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களில் பசுபதி, அஜித்குமார், பார்வதி நாதன் ஆகியோர் பிடித்தனர்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பை விழாவில் ஶ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து, 77 ஆவது சுதந்திர தின விழாவை நினைவு கூறும் விதமாக கராத்தே மாஸ்டர் இமானுவேல், வயிற்றில் 77 முறை இளைஞர்கள் நடந்து சென்றனர்.
பின்னர், கராத்தே மாஸ்டர் ஜெயக்குமார் தனது வயிற்றில் ஒன்பது பாறாங்கல்லை சம்பட்டியால் உடைத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பரிசளிப்பு விழா முடிவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.