தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி, கோவில்பட்டியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-05-29 07:21 GMT

தூத்துக்குடியில் அ.தி.மு.க .சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மற்றும் வழிப்பறி, கொலை, கொள்ளை, உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டம் ஒழுங்கை சரி செய்யாத தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைப்புச் செயலாளர்கள் சின்னத்துரை, செல்லப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க .அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவில் பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி.

இதேபோல, தி.மு.க. அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தி.மு.க.வின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.

மேலும், அரசு அதிகாரிகள் கொலை, போதைப் பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திம், தி.மு.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News