வஉசிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்புப் படையின் (CISF) மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Update: 2022-01-26 14:51 GMT

இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழா, வ உ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் சிறப்பான முறையில் இன்று காலை 8 மணியளவில் கொண்டாடப்பட்டது.

73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தா கி ராமச்சந்திரன், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின விழாவின் சிறப்புரையில் வ உ சிதம்பரனார் துறைமுகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன், உலகளாவிய கடற்சார் வர்த்தகத்தில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இச்சூழலிலும் கூட நம் வ உ சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டின் டிசம்பர் மாதம் வரை 26.05 மில்லியன் டன் சரக்குகளையும், சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரை 5.93 லட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 10.37 சதவீதம் அதிகம் கையாண்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் நம் நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்ததை நினைவுகூரும் விதமாக இந்திய அரசு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின்கீழ் பல்வேறு கொண்டாட்டங்களை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக துறைமுக வளாகத்தில் தமிழ்நாட்டின் கடற்சார் வாணிபத்தினை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு கடற்சார் அருங்காட்சியகம் மற்றும் வ.உ.சி.அருங்காட்சியகமும் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் தம் நாட்டின் உட்கட்டமைப்பு துறைக்காக இந்திய அரசு கதிசக்தி எனும் பல்முறை இணைப்புகளுக்கான தேசிய திட்டத்திற்கு கைகோர்க்கும் விதமாக நமது துறைமுகத்தில் சரக்கு தளம் ஒன்பதினை 3 வது சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல், வடக்கு சரக்கு தளம் 3-னை இயந்திரமயமாக்குதல் மற்றும் சரக்கு தளம் 1,2,3 மற்றும் 4-ஐ சரக்கு பெட்டக முனையமாக மாற்றுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் தனது உரையில் துறைமுக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சிறப்பான பணி, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு மற்றம் துறைமுக உபயோகிப்பாளர்களின் சீரிய செயல்பாட்டிற்கு நன்றி தெரிவித்துடன் வ.உ.சிதம்பரனார் துறைமுகம், நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் சிறந்த சரக்கு பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2020-2021 ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களான கப்பல் முகவர்கள், ஸ்டிவிடோர், சுங்கத் துறை முகவர், சரக்கு பெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் துறைமுகத்தில் மிகச்சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



Tags:    

Similar News