தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின்போது விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு அவர்களின் உடலுக்கு மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் செந்தில்ராஜ் ஐஏஎஸ் மற்றும் மதுரை சரக டிஐஜி திரு ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தல் இறுதிச்சடங்கு நடைபெற்றது காவல்துறையினர் 30 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது