தூத்துக்குடி: பிப்.5 மீனவர் குறை தீர்க்கும் நாள்

தூத்துக்குடியில் பிப்.5-ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.;

Update: 2021-02-03 08:33 GMT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற பிப்.5ம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது,

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 05.02.2021 அன்று (வெள்ளிக் கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மீனவர் சமுதாயத்தை சார்ந்த பிரதிநிதிகள்/சமூக ஆர்வலர்கள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள், மீனவ கிராமங்களை சார்ந்த ஊர்த் தலைவர்கள்/பெரியவர்கள் அவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் முகவசம் அணிந்து சமூக இடைவளியை பின்பற்றவும், மற்றும் கொரானா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News