மனிதநேயம் மட்டுமே மானிடத்தை காக்கும். - கனிமொழி
இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம்.
கோவில்பட்டி சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
துத்துக்குடி மாவட்டம் பாண்டவர் மங்கலத்தில் இன்று கொரானா உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்துகொண்டார் அப்போது கோவில்பட்டியைச் சேர்ந்த சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த 1970 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
தந்தையை இழந்த இத்துயர தருணத்திலும் ரிதானாவின் இச்செயல் இப்பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. மனிதநேயம் மட்டுமே மானிடத்தை காக்கும் என கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேபோல நேற்றைய தினத்தில் தூத்துக்குடியில் சிறுமி வவுனியா தேவி தன் பிறந்தநாள் செலவிற்காக வைத்திருந்த ரூபாய் 2 ஆயிரத்தை என்னிடம் அளித்தது என்னை நெகிழச் செய்தது இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து வெற்றி நடைபோடும் என்ற நம்பிக்கை எனக்கு அளித்தது எனவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்