தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திடீர் மாற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் இன்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். புதிய ஆணையாளராக சரண்யா அரி நியமனம்.;
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் இன்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் வி.பி.ஜெயசீலன். மாநகராட்சி பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இன்னும் மழைநீர் முழுமையாக வடியாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு
வருகின்றனர். ஆங்காங்கே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளும் பாதியில் நிற்கின்றன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சென்னை சர்வே மற்றும் நில ஆவணம் பிரிவு கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி கலெக்டராக பணியாற்றி வரும் சரண்யா அரி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.