தூத்துக்குடியில் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
தூத்துக்குடி தாளமுத்துநகர் சப் இன்ஸ்பெக்டர் மகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த நபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி மற்றும் 87 தோட்டாக்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர் பழைய காயல் புல்லாவெளி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த அய்யாக்குட்டி மகன் ஜெயராஜ் என்ற தவிடு (50). என்பதும் அவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அவரை கைது செய்து, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் இன்ஸபெக்டர் ஜெயந்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.