தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -கனிமொழி எம்.பி
தமிழகத்தில் எந்தந்த தொழிற்சாலைகள் வந்துள்ளன? என்னென்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என திமுக மகளீரணி செயலாளரும், மக்களவை துணை தலைவருமான கனிமொழி எம்பி கூறியுள்ளார்.;
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி கூறியதாவது ,
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில் அதிமுக தொடர்ந்து அந்த சம்பவத்தை மூடி மறைக்கவே முயற்சி செய்துவருகிறது. திமுகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதோடு அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் கொரானா ஊரடங்கு காலத்தில் கூட 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கபட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார், தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்ன? எந்தெந்த நிறுவனங்கள் இங்கே வந்துள்ளன? என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதிமுகவினர் தோல்வி பயத்தில் திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களை விமர்சித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.