முதலமைச்சர் வாகனத்தை தொடர்ந்து சென்ற கார் விபத்து

Update: 2021-01-05 04:30 GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற இரு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முதலமைச்சரின் கார் அணிவகுப்பு சென்றபோது ஏராளமான கட்சியினர் தங்களது வாகனங்களில் தொடர்ந்தனர். அப்போது சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் கார் ஒன்று மோதி நின்றது.இதனால் பின்னால் வந்த மற்றொரு கார் விபத்தில் சிக்கிய கார் மீது மோதியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News