தேமுதிக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தகவல் அறிந்தார். தீக்குளிக்க முயன்ற குறிச்சி குட்டியை அழைத்து, அன்புடன் கண்டித்தார். அவருக்கு சால்வை அணிவித்து அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.;

Update: 2021-01-03 17:20 GMT

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளராக முகமதுஅலி பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக மீனாட்சி சுந்தரம் என்பவரை விஜயகாந்த் நியமனம் செய்தார். இந்நிலையில் புதிய மாவட்ட செயலாளரின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்டார் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற தேமுதிக தொண்டர். குட்டி திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தற்கொலை முயற்சியில் இருந்து சக தொண்டர்கள் மீட்டனர். இது குறித்து சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவல் அறிந்த சுதீஷ் குறிச்சி குட்டியை அழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அன்புடன் கண்டித்து அவருக்கு சால்வை அணிவித்து அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

Similar News