இங்கிலாந்தில் இருந்து தூத்துக்குடி வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை : தூத்துக்குடி ஆட்சியர்

Update: 2020-12-30 09:15 GMT

இங்கிலாந்தில் இருந்து தூத்துக்குடி வந்த 33 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெல் நிறுவன பொறியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் கட்ட பரிசோதனை இன்று அனைத்து கட்சி பிரதிநதிகள் முன்பு முதல் நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.தொடர்ந்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் கட்ட பரிசோதனை மேற்க்கொண்டனர். பின்னர் அனைத்து கட்சி பிரநிதிகளின் சந்தேகங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் விளக்கி கூறினார்கள். பின்னர் மாதிரி ஓட்டெடுப்பு அனைவர் முன்னாலும் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2021ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்துவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களான கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபேட் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளது.

மேலும், ஏற்கனவே மாவட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேர்த்து 2795 கன்ட்ரோல் யூனிட், 3668 பேலட் யூனிட், 3036 விவிபேட் இயந்திரங்கள் ஒவ்வொன்றாக பெல் நிறுவன பொறியாளர்கள் அனைத்து கட்சி பிரதிநதிகள் முன்னிலையில் முதல் நிலை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இவை அனைத்தும் வீடியோ கவரேஜ் செய்யப்பட்டு சிசிடிவி மூலமாக வெப் காஸ்டிங் பண்ணப்பட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1603 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது என்றார்.இங்கிலாந்தில் இருந்து தூத்துக்குடி வந்த 33 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என கூறினார். ஆய்வின் பொது சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News