தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

Update: 2020-12-25 05:19 GMT

தூத்துக்குடியிலுள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கிறிஸ்துமஸ் விழாவாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி பங்கு தந்தை குமார்ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த திருப்பலியில் உலக நன்மைக்காக சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இதே போல தூத்துக்குடியில் உள்ள முக்கிய தேவாலயங்களான, திரு இருதய மேற்றிராசன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம், தூய பேதுருதேவாலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 11.30 மணியிலிருந்தே மக்கள் வரத் துவங்கினர். புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். கொரானா ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால் கிறிஸ்துமசை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் கேரல் வாகனங்கள் ஊர்வலம் இந்தாண்டு நடைபெறவில்லை.

Tags:    

Similar News