அடிதடி உட்பட பல வழக்கில் தொடர்பு இருந்து ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், கோவில் தெருவைச் சேர்ந்தவர் பீட்டர் மகன் அருண் ராஜேந்திரன் (32). இவர் மீது நாசரேத் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு உட்பட4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்ட நிலையில் இவர் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாட்டக்கரை பகுதியில் அருண் ராஜேந்திரன் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், தலைமை காவலர் பிரேம்குமார், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் கணேசன், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பாட்டக்கரையில் மறைந்திருந்த அருண் ராஜேந்திரனை கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.