திருவாரூர் மாவட்டம் விடயபுரம் சிவன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விடயபுரம் சிவன் கோயிலில் அம்மாவாசை சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.;
திருவாரூர் அருகே விடயபுரம் பகுதியில் ஆயிரம் அண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி பகவான் சிவனுக்கு அபிஷேகம் பால், நெய், தேன், பஞ்சாமிர்தம், மூலிகை பொடி, பூக்கள், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கொரானா கட்டுப்பாடுகளை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் இந்த அபிஷேக, ஆராதனை நடைபெற்றது