திருவாரூர் கமலாலயக் குளம் சுற்றுச்சுவர் இடிந்தது
திருவாரூரில் உள்ள கமலாலயக் குளத்தின் சுற்றுச் சுவரின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தற்போது விவசாய நிலங்களின் தேங்கிய நிர் வடிந்து வருகிறது. திருவாரூர் பகுதிகள் அனைத்து ஈரப்பதத்துடன் காணப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் கமலாலயக் குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கு எவ்வித பாதிப்பு எற்பட வில்லை.