திருவாரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்
தமிழகம் முழுவதும் ஆக 23 முதல் 27 வரை மாவட்டத் தலைநகர், கிராமங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது.
திருவாரூர் அருகே விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து மக்கள் நாடாளும் மன்றம் நடைபெற்றது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றும் பாஜக அரசை கண்டித்த 23 -ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரம் , மற்றும் கிராமங்கள் தோறும் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடத்தபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, திருவாரூர் அருகே கொடிக்கால் பாளையம் பகுதியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டம் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வகிதா நிஜாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் , மோட்டார் வாகன திருத்த மசோதவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ப்