அகவிலைப்படி உயர்வை வழங்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படி உயர்வை வழங்காத தமிழக அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான 11 சதவீத அகவிலைப்படி உயர்வை அண்மையில் அறிவித்தது. கடந்த காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடன், மாநில அரசும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது வழக்கம். தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும், சரண்டர் மீள் தொகையை வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.