திருவாரூர் மாவட்டத்தில் நாளைய தினம் 459 இடங்களில் தடுப்பூசி முகாம்
நாளைய தினம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் 3 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறைக்கும் விதமாக மாவட்டம் தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளைய தினம் மாவட்டம் முழுவதும் 459 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இதன் மூலம் 50 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் பெயர்கள் பதியப்பட்டு முகாம் முடிவுற்ற பின் வட்டார அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று நபர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களான டின்னர் செட் ,ஹாட் பாக்ஸ் ,கிட்சென் செட் பரிசாக வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.