விவசாய கடன் தள்ளுபடி: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டதை திருவாரூரில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டம்.

Update: 2021-02-05 12:15 GMT

விவசாயிகளின் கடன் தள்ளுபடி என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டதை திருவாரூரில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டம்.

இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழக விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய கழகம் சார்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் பி.கே.யூ.மணிகண்டன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News