தவ்ஹீத் ஜமாஅத் - பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக ஆண்டு பொதுக்குழுகூட்டம் நடந்தது.

Update: 2021-01-24 11:00 GMT



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் திருச்சி சையது முகமது தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தௌஸீ கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் ஆண்டு அறிக்கைகளை மாவட்ட தலைவர் முகமது பாசித், மாவட்ட செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பொருளாளர் முகமது சலீம் ஆகியோர் வாசித்தனர். அரசு போட்டி தேர்வு குறித்து மாவட்ட துணைத்தலைவர் பீர்முகம்மது பேசினார். இப்பொதுக்குழுவில் கடந்த ஓராண்டில் சமுதாய சேவைகளில் சிறப்பாக செயல்பட்ட கிளைகளுக்கு மாநில செயலாளர் திருச்சி சையது முகமது பரிசுகளை வழங்கினார்.

பின்னர் மாநில செயலாளர் திருச்சி சையது முகமது கூறுகையில் மத்திய அரசு வேளாண் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், கல்வி வேலைவாய்ப்பு அரசு துறைகளில் இஸ்லாமியர்களுக்கு மாநில அரசு 7 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்றும், மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்றும், குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய மாநில அரசுகள் நடைமுறை படுத்த கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பொதுக் குழுவில் மாவட்ட துணை செயலாளர்கள் இஸ்மத், தாரிக், மாலிக் மற்றும் மருத்துவரணி மாணவரணி செயலாளர்கள் உட்பட அனைத்து கிளை நிர்வாகிகள் என சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News