தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
தேனி : சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமதர்மபுரம், 19-வார்டு, கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி. இந்த தொட்டியின் கான்கீரீட் பில்லர்கள் சிதிலமடைந்துள்ளது. நாள் தோறும் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் வந்து செல்கின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக இதனை சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.