தேனி : ஒரு வெள்ளத்துக்கே இப்படியா? பிள்ளையார் அணை சேதம்! பேரதிர்ச்சி!!

போடிநாயக்கனூரில் உள்ள பிள்ளையார் அணை கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் சேதமடைந்துள்ளது.

Update: 2021-06-08 05:01 GMT

மூலைவிட்டங்கள் உடைந்தும், ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கும் பிள்ளையார் அணை.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் - மூணார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குறுக்குச் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பிள்ளையார் அணை. கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிள்ளையார் அணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது. தற்போது தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அணையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும், அணையின் மூலைவிட்டங்கள் உடைந்தும் காணப்படுகிறது.

தேனியில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது இந்தப் பிள்ளையார் அணை. கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் ஒரு முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணை சேதமடைந்து இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி பகுதியில் நடைபெறும் அரசு கட்டுமானப்பணிகள் பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் மேற்பார்வையில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பிள்ளையார் அணை மேற்பார்வையிடும் பணிக்கு, போடியில் உள்ள பொதுப்பணித்துறை உதவிபொறியாளரை தவிர்த்து விட்டு, தேனியிலிருந்து தனியாக உதவி பொறியாளரை நியமித்து அவரது மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அணை சேதமடைந்து இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே மாவட்ட நிர்வாகம் சார்பில், அணை பாதுகாப்பு குழு அமைத்து அணை கட்டுமான பணிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Theni #PillaiyarDam #Damage #oneFlood #shock #பப்ளிக் #தேனி #ஒருவெள்ளத்துக்கே #தாக்குபிடிக்காமல் #சேதமடைந்த #பிள்ளையார்அணை  #tamilnadu #instanews

Tags:    

Similar News