தேனி பெரியகுளம் சாலையில் சுற்றி வந்த வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம்!

பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சியில் வெறி நாய் கடித்ததில் ஆறு நபர்கள் படுகாயமடைந்தனர்.;

Update: 2021-05-28 13:10 GMT
வெறிநாய் கடித்து காயமடைந்தவர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய் கடித்ததில் ஆறு நபர்கள் படுகாயமடைந்தனர்.

சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் தொல்லை இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய்தொற்று பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால், வெறிநாய் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பஞ்சவர்ணம், சண்முகவேல் உட்பட ஆறு நபர்களை வெறிநாய் கடித்து உள்ளது. மேலும் இரண்டு பசுமாடுகள் மற்றும் கன்று குட்டிகளையும் கடித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆகவே சில்வார்பட்டி ஊராட்சி நிர்வாகமும், பெரியகுளம் ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News