தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் ஊராட்சி பகுதியில் ஒரே நாளில் 32 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ஆங்கூர்பாளையம் ஊராட்சி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் 32 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
ஆங்கூர்பாளையம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகாதார துறை சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதற்கான முகாம் நடைபெற்றது.. இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் மூலம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 32 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. .
இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் தனி வாகனம் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 32 நபர்களையும் தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.